தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திமுக கூட்டணியினர் மறியல்: 60 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்ட போலீஸாரைக் கண்டித்தும், அதற்குக் காரணமான தமிழக முதல்வரை பதவி விலகக் கோரியும் கரூரில் வெள்ளிக்கிழமை திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாவட்டச் செயலர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினருமான பேங்க் கே. சுப்ரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
முன்னதாக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதற்குக் காரணமான தமிழக அரசை பதவி விலகக் கோரியும் கோஷங்களை எழுப்பி, ரவுண்டானா பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு நகர துணைக் காவல் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் 2 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து,  பின்னர்  மாலையில் விடுவித்தனர். 
முன்னதாக காலையில் கரூர் வெங்கமேடு பகுதியில் கடைகளை மூடுமாறு கூறிய கரூர் வடக்கு நகர திமுக செயலர் கரூர் கணேஷ் உள்ளிட்ட 10 பேரையும், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் கடைகளை மூடுமாறு வலியுறுத்திய நகர துணைத் தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 8 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com