க.பரமத்தி ஒன்றியப் பகுதிகளில் மனு பெறும் முகாம்

க. பரமத்தி ஒன்றியப் பகுதியில் ரூ.15.70 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.

க. பரமத்தி ஒன்றியப் பகுதியில் ரூ.15.70 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியம், கோடந்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோடந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் பேசியது:
மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் 
இருப்பிடம் தேடிச் சென்று பொதுமக்களின் குறைகளை 
மனுக்களாகப் பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. கோடந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 102 பணிகள் ரூ. 2.84 கோடியிலும், கூடலூர் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 210 பணிகள் ரூ.2.66 கோடியிலும், கூடலூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 595 பணிகள் ரூ. 6.33 கோடியிலும், ஆரியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 380 பணிகள் ரூ. 3.87 கோடியிலும் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, வட்டாட்சியர் பிரபு (அரவக்குறிச்சி), கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com