கோட்டாட்சியர், வட்டாட்சியரகத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர்

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், இனி திங்கட்கிழமை தோறும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படும். 

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், இனி திங்கட்கிழமை தோறும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படும். 
   கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 
   கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என மொத்தம் 323 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். 
தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியது: கோடை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில்,  இனி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடத்தப்படும். அங்கும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பரிசீலனை செய்யப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும்  மனு செய்து பயன் பெறலாம் என்றார். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்,  மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை ஆட்சியர் பாலசுப்ரமணியன்,  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்ரமணியம், தேசிய தகவலியல் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com