கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்க்க வேண்டும்

புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுக்குப் பெருமை சேர்க்க் வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.

புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுக்குப் பெருமை சேர்க்க் வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
2018-19ஆம் கல்வியாண்டில் கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே அறிவியல் திறன் மற்றும் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இந்தக் கண்காட்சி புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்  தொடக்கி வைத்து ஒவ்வொரு மாணவரின் படைப்பையும் பார்வையிட்டு அதன் விளக்கங்களை மாணவ-மாணவிகளிடம் கேட்டறிந்து பாராட்டினார்.
கண்காட்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் வீதம் 200 மாணவர்கள் தங்களின் வழிகாட்டி ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.
உணவுப் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல், நகரும் பொருட்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள், இயற்கைப் பாதுகாப்பு, கணிதவியல், அறிவியல், பொருட்களின் பயன்பாடு என மொத்தம் 8 வித தலைப்புகளில் 100 வித படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அனைவரின் படைப்புகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் பயன்படக்கூடிய பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட தலைப்புகளின் கீழான படைப்புகளில், ஒவ்வொரு தலைப்பிலும் தலா 3 பரிசுகள் வீதம் 24 படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக ரூ.1500, இரண்டாம் பரிசாக ரூ.1000, மூன்றாம் பரிசாக ரூ.500 வழங்கப்படும். பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேல், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கனகராஜ், கபீர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com