ஆர்.டி.மலை கரையூரான் கோயிலில் ஆடி 28 பூஜை 

தோகைமலை அருகிலுள்ள ஆர்.டி.மலை கரையூரான்  நீலமேகம் கோயிலில்,  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

தோகைமலை அருகிலுள்ள ஆர்.டி.மலை கரையூரான்  நீலமேகம் கோயிலில்,  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடி 28 பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஆடி 28ஆம் திருவிழாவையொட்டி கிடாவெட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை கரையூரான் நீலமேகத்துக்கு நீராட்டு செய்த பின்னர் அலங்காரம் செய்யப்பட்டது.
 சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர்,  கிராம மக்கள் கரையூரான் நீலமேகத்துக்கு நேர்த்திக்கடனாக கொண்டு வந்த நூற்றுக்கணக்கான கிடாக்களை வெட்டி  சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.
கோயில் நிர்வாகக் குழுவினர்,  ஆர்.டி.மலை ஊராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com