திருக்குறள் பேரவையின் ஆண்டுவிழா  போட்டிகளுக்கான முடிவு வெளியீடு

கருவூர் திருக்குறள் பேரவையின் ஆண்டு விழா கட்டுரை, மலருக்கான படைப்புகள் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருவூர் திருக்குறள் பேரவையின் ஆண்டு விழா கட்டுரை, மலருக்கான படைப்புகள் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பேரவையின் செயலர் மேலை. பழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை: 
கருவூர் திருக்குறள் பேரவையின் 33-ம் ஆண்டு விழா வரும் மார்ச் 3-ல் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த வாரம் பேரவை சார்பில் மாநில அளவிலான சிறந்த நூல், கட்டுரை, மலருக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டன. 
இதில் தேர்வு செய்யப்பட்ட நூல்கள், மலர்கள், கட்டுரைகள் விவரம்: சிறந்த நூல்கள் போட்டியில் 87 நூல்கள் இடம் பிடித்தன. இதில் ஈரோடு சந்திராமனோகரனின் பன்முகன் சிறுகதை நூல் முதல் பரிசையும், முனைவர் கடவூர் மணிமாறன் எழுதிய குறிஞ்சிப்பூக்கள், பாவலர் சேலம் எழிலனின் வளர்ப்பால் தடம் புரண்ட வாழ்க்கை ஆகியவை இரண்டாம் பரிசையும், முனைவர் நயம்பு அறிவுடைநம்பியின் திருக்குறள் இலக்கண ஆய்வுச்சான்று, செல்லிப்பாளையம் சேலம் செ.சி. இளந்திரையனின் தேன்மொழியும், நாகர்கோயில் பி. உஷாதேவியின்  ஊதாவண்ண இலைகளின் நூலும் மூன்றாம் பரிசை பெறுகின்றன.  நூல்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
மலரில் நாவைசிவம்-எழில்வாணன், இளசைசுந்தரம், கருவூரார் அருணாபொன்னுசாமி, அழகரசன், தமிழவன், இலலிதாசுந்தரம், கருவைவேணு, ஜெகதீசுவரி, குளித்தலை கருப்பண்ணன் மல்லிகா உள்லிட்ட 40 பேர் பாராட்டும், பரிசும் பெற உள்ளனர்.
 மேலும் கட்டுரைப் போட்டியில் பல்வேறு பள்ளி மாணவிகளுக்கு வரும் மார்ச் 3-ம்தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com