சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜை: நெரூரில் தொகுப்பு வீடுகள் சீரமைப்புக்கு நிதியுதவி

கரூர் ஊராட்சிக்குள்பட்ட நெரூரில் பழுதான தொகுப்பு வீடுகளை சீரமைக்க 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நிதியுதவி வழங்கும்


கரூர் ஊராட்சிக்குள்பட்ட நெரூரில் பழுதான தொகுப்பு வீடுகளை சீரமைக்க 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நிதியுதவி வழங்கும் ஆணை, சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜை என ரூ. 2.93 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை சனிக்கிழமை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் சனிக்கிழமை ரூ.2.93 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். 
முன்னதாக வியாழக்கிழமை நெரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சரிடம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ நெரூரில் பழுதான தொகுப்பு வீடுகளுக்கு சீரமைப்பு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுப்பு வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நிதியுதவிக்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார். மேலும் சாலை மேம்பாட்டிற்கான பூமிபூஜை பணிகளையும் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன், கூட்டுறவுசங்கங்களின் பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், கமலக்கண்ணன், பி.மார்கண்டேயன், பசுவைசிவசாமி, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com