தேசிய உழவர் உழைப்பாளர் கழக வேட்பாளருக்கு டிபன் பாக்ஸ் சின்னம்

தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் வேட்பாளர் ஜே.ஜோதிகுமாருக்கு டிபன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் வேட்பாளர் ஜே.ஜோதிகுமாருக்கு டிபன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான ஜே.ஜோதிகுமார் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு தேர்தல் ஆணையம் டிபன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து  சின்னத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி கரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. சின்னத்தை அறிமுகம் செய்து வேட்பாளர் பேசினார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 
இதில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள திராவிடக் கட்சிகளின் குறைகளை மக்களிடம் விளக்கி தீவிரமாக பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com