தாந்தோணியில் ஜோதிமணி வாக்குச் சேகரிப்பு

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஏமூர், ஏமூர்புதூர், கத்தாளப்பட்டி, துளசிக்கொடும்பு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: 
தமிழக மக்களின் நலனுக்கு எதிரான ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும்  நடந்து வருகிறது. தமிழகம் வளம்பெற நீங்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அண்மையில் சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட ராகுல்காந்தி, நீட் தேர்வு தமிழகத்திற்கு கிடையாது. மாநில கல்விக்கொள்கையும், இனி மத்திய அரசின் கையில் இருக்காது போன்ற தெளிவான வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றார்.  முன்னதாக வேட்பாளர் செ.ஜோதிமணிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி பேசியது: 
அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையிடம் கேட்ட கேள்விக்கு எங்களுடன் விவாதிக்க  முன்வரவில்லை.  கரூரில் நான் செய்த திட்டங்களையெல்லாம் அவர்கள் செய்ததாக கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.  பிரசாரத்தில் திமுக மாநில சட்டத்துறை இணை செயலாளர் வழக்குரைஞர் மணிராஜ், நகரச் செயலாளர் கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பூவை.ரமேஷ்பாபு மற்றும் விசிகே மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு நாஞ்சில் சம்பத் பிரசாரம்: கரூர் வாங்கல், தளவாபாளையம், புகழூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்து நாஞ்சில் சம்பத் பேசினார். பிரசாரத்தின்போது திமுக கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com