பிளஸ் 2 மாணவர்களுக்கு சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு,  அந்தந்த பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ்கள் விநியோகிக்கும் பணி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது.


பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு,  அந்தந்த பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ்கள் விநியோகிக்கும் பணி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது.
தமிழகம்  முழுவதும், மார்ச் 1 - ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2  பொதுத்தேர்வு 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டத்தில்,  201 பள்ளிகளைச் சேர்ந்த 11,052 மாணவர்கள்,  11,675 மாணவியர் என மொத்தம் 22,727 பேர் தேர்வு எழுதினர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவுகளில்,  10,414 மாணவர்கள், 11,170 மாணவியர் என மொத்தம் 21,584 பேர் தேர்ச்சியடைந்தனர்.
 1,143 பேர் தேர்வில் தோல்வியடைந்தனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. 
இந்த நிலையில், மாணவ, மாணவியர் கல்லூரியில் சேர்க்கைப் பெறுவதற்காக, அவர்கள் பயின்ற பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
மாணவ, மாணவியர் தாங்கள் படித்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க இன்னும் 2 மாதங்களாகி விடும். கல்லூரிகளில் சேர்க்கை பெறுவோர் நகல் மதிப்பெண் சான்றிதழைக் காண்பித்து பயன்பெறலாம் என முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com