கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் திருக்கல்யாணம்

கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கருவூர் ஸ்ரீமகா அபிஷேகக் குழு சார்பில் 21-ஆம் ஆண்டு ஆடி திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 27-ஆம் தேதி கோயில் முன் முகூர்த்தக் கால் நடப்பட்டது. தொடர்ந்து, சுவாமி கல்யாண பசுபதீசுவரருக்கும்,  ஆனிலை அலங்காரவள்ளி, ஆனிலை சௌந்திரநாயகி அம்பிகைக்கும் நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவந்தது. இதையடுத்து சனிக்கிழமை காலையில் கொடிமர விநாயகருக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை பொருள்களுடன் பெண் வீடு புகுதல், சீர்தட்டு அழைத்தல், சிறப்பு உபசரணைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசன திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தெய்வத்திருமணம் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி தருண்விஜய், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு திருமண விருந்தும், அன்னதானமும் நடைபெற்றது. மேலும் மொய் விருந்தும் நடைபெற்றது. கோயில் திருமண உத்ஸவ வர்ணனையை கருவூர் திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை.பழநியப்பன் செய்தார்.  இதையடுத்து கவிதா மற்றும் பரணிபார்க் பள்ளி முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியனின் பிள்ளைகள் ஸ்வேதா காயத்ரி, தயா கார்த்திக் ஆகியோரின் தமிழிசை பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இரவு அம்மனுடன் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை  கருவூர் ஸ்ரீமகா அபிஷேகக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com