கொலையானோர் குடும்பத்தினருக்கு விவசாயிகள் ஆறுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் குடும்பத்தினரை 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் குடும்பத்தினரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினர்.
குளித்தலை அடுத்த முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை(65). விவசாயி. இவரது மகன் வாண்டு என்கிற நல்லதம்பி(45). சமூக ஆர்வலர்களான  வீரமலையும், நல்லதம்பியும், அதேபகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட  குளத்தை அதே பகுதியினர் மற்றும் எட்டரை, கோப்பு பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வழக்குத்தொடர்ந்துள்ளனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் தந்தையையும், மகனையும் அதேபகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் தலைமையிலான ரவுடிகள் கடந்த 29 ஆம்தேதி வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி சின்னதுரை, சமூக நீதி பேரவையின்  ரவிக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சமூக ஆர்வலர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தைப் பார்வையிட்டனர். பின்னர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் வீரமலை, நல்லதம்பியின் வீட்டுக்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com