கரூரில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்தல்

கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட பைனான்ஸ் மற்றும்

கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வித்யாசாகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொருளாளர் எம். ராமகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஆர். பாலசுப்ரமணியன், பி. ராமசாமி, பி. பெரியசுவாமி, இணைச் செயலர்கள் எல். கெங்கப்பன், கேபி. சுப்ரமணியன், சிகே. வேலுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் குமரேசன் பங்கேற்று, நிதிநிறுவனத்தில் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் நீதிமன்றங்களில் நிதிநிறுவனங்கள் தொடர்பாக தொடரப்படும் புரோநோட், காசோலை மோசடி வழக்குகளை வாரம் ஒருமுறை விசாரித்து விரைவில் தீர்ப்பு கிடைக்க உரிய ஆவன செய்ய வேண்டும்,
போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய பேருந்துநிலைய பணிகளை தொடங்கிட வேண்டும். கரூர்-சென்னைக்கு இரவு 10 மணிக்கு ரயில் இயக்க வேண்டும்,  கரூரில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வர்த்தகர்கள் வெளிநாடு சென்றுவரும் வகையில் விமான நிலையம் கட்டித்தர வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.   செயலர் எஸ். சிவசாமி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com