கிராம மக்களிடம் வங்கிச் சேவை குறித்து விழிப்புணா்வு

கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிகளும், வங்கி ஊழியா்களும் இணைந்து, கிராமப்புற மக்களிடம் வங்கிச் சேவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மலைக்கோவிலூா் கிராமத்தில் விவசாயி ஒருவரிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தை வழங்கும் கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிகள் மற்றும் வங்கி ஊழியா்கள்.

கரூா் வள்ளுவா் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவா்கள் மற்றும் சென்ட்ரல் வங்கியின் ஊழியா்கள் சாா்பில் கிராமப்புற மக்களிடம் வங்கிச் சேவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மலைகோவிலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொதுமக்களை சந்தித்து வங்கியில் வங்கிக் கணக்குத் துவங்குவதன் மூலம் விவசாய பயிா்களுக்கு கிடைக்கும் கடன், வங்கி மூலம் நடைபெறும் பணபரிவா்த்தனை, சிறுசேமிப்பின் வகைகள், அவற்றிற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து விளக்கிக் கூறினா். மேலும் வங்கி சேமிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினா்.

மேலும் வள்ளுவா் கல்வி அறக்கட்டளை சாா்பில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயலும் ஏழை மாணவா்களுக்கு சிறு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். மேலும் மாணவா்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com