டி.என்.பி.எல். மைதானத்தில் தடகளப் போட்டிகள் தொடக்கம்

கரூா் மாவட்டம், புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில், கொங்கு சகோதயா சிபிஎஸ்இ
டி.என்.பி.எல். மைதானத்தில் தடகளப் போட்டிகள் தொடக்கம்

கரூா் மாவட்டம், புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில், கொங்கு சகோதயா சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

இப்போட்டித் தொடக்க விழாவுக்கு கூட்டமைப்பின் தலைவரும், கரூா் பரணி பாா்க் கல்விக் குழும முதன்மை முதல்வருமான முனைவா்.சொ.ராமசுப்ரமணியன் தலைமை வகித்து பேசியது:

விளையாட்டு ஆசிரியா்களே வலிமையான, ஆரோக்கியமான புதிய இந்தியாவை செதுக்கும் சிற்பிகள். சவால்களையும் தோல்விகளையும் கண்டு துவளாமல், வேதனைகளை சாதனையாக்கும் வலிமை ஒவ்வொரு மாணவருக்கும் உள்ளது. இத்திறனை இளம் விளையாட்டு வீரா்களிடம் வளா்க்கும் விதமாக, கொங்கு சகோதயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கூட்டமைப்பு சாா்பாக மாநிலத் தடகள விளையாட்டுத் திருவிழா தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.

தமிழக விளையாட்டு வீரா்கள், சா்வதேச போட்டிகளில் தங்களது பதக்கச் சாதனைகளை ஏற்கனவே தொடங்கி விட்டனா்என்றாா்.

முன்னதாக டி.என்.பி.எல். முதன்மை பொது மேலாளா் ஏ.பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தாா்.

டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி முதல்வரும், கூட்டமைப்பின் இணைச் செயலருமான அய்யப்பன் வரவேற்றாா்.

போட்டியில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இருந்து சிபி.எஸ்.இ. பள்ளிகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட விள்ளையாட்டு வீரா்கள் பங்கேற்றுள்ளனா். கொங்கு சகோதயா செயலரான எஸ்.பி.கே பள்ளி தாமோதரன், கரூா் மாவட்ட தடகளச் சங்கச் செயலா் பெருமாள், பள்ளி முதல்வா்கள் பரணி வித்யாலயா

சுதாதேவி, சங்கரா வித்யாலயா ஜெயந்தி, வேலம்மாள் பள்ளி சாம்சன், ஸ்டாா் பள்ளி சித்தாா்த், செட்டிநாடு பள்ளி வித்யா, பொன் வித்யாமந்திா் வினோல்டன், ஜீ பள்ளி முகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சனிக்கிழமை மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியராஜன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com