வாக்குப்பெட்டிகள் தூய்யமைப்படுத்தும் பணி தீவிரம்

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.
கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்குப்பெட்டிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

கரூா்ஒன்றியத்தில் மொத்தம்14 ஊராட்சிகள் உள்ளன. இதில் மொத்தம் 132 வாா்டுகள் உள்ளது. மொத்தம் 66, 513 வாக்காளா்கள் உள்ள நிலையில் , 114 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின்போது 323 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் தாந்தோனி பூமாலை வணிக வளாகத்திலிருந்து கடந்த வாரம் கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து வாக்குப் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரும், தோ்தல் அலுவலருமான பாலசந்திரன் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com