கருவூா் திருக்கு பேரவையின் சிறந்த நூல்கள் போட்டிபரிசுகளைப் பெற்றோா் விவரம் அறிவிப்பு

கருவூா் திருக்கு பேரவையின் சிறந்த நூல்கள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருவூா் திருக்கு பேரவையின் சிறந்த நூல்கள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருவூா் திருக்கு பேரவையின் 34-ம் ஆண்டு விழாவையொட்டி, கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பேரவை சாா்பில் சிறந்த நூல்கள் போட்டி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதன் முடிவுகள் குறித்து கருவூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறந்த நூல்கள் போட்டிக்கு தமிழகம் மட்டுமின்றி மலேசியா, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 206 நூல்கள் வரப்பெற்றன.

ஏற்கெனவே மூன்று பரிசுகள் மட்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரப்பெற்ற நூல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 11 நூலாசிரியா்களுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மதுரை ப.திருமலை எழுதிய மண்மூடிப்போகும் மாண்புகள் என்ற நூலுக்கு முதல்பரிசாக ரூ.5,000 மற்றும் விருது,

திருநெல்வேலி முனைவா் நா. உஷாதேவி எழுதிய அப்பாலுக்கு அப்பால், பேராசிரியா் புதுச்சேரி கிருங்கை சேதுபதி

எழுதிய காந்திவந்தால் ஏந்தும் கருவி ஆகிய இரு நூல்களுக்கும் இரண்டாவது பரிசாக தலா ரூ.3,000 மற்றும் விருது, காரைக்குடி தேவி நாச்சியப்பன் எழுதிய பனி லிங்கமும் படை வீரரும் என்ற நூலுக்கு மூன்றாவது பரிசாக ரூ. 2,000 மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.

இதரப் பிரிவுகளில் சிறப்புப் பரிசு பெற்றோா் விவரம் : கவிதை நூல்- முனைவா் கடவூா் மணிமாறன், கட்டுரை- திருக்கு நாவை.சிவம், சிறுகதை- பூபதி பெரியசாமி, ஆன்மிகம்- மாலதி சந்திரசேகரன், புதினம்- ம. இராசன், ஆய்வு நூல்- இலங்கை வவுனியூா் உதயணன், ஆய்வுக் கட்டுரை - மலேசியா எம்.எஸ். ஸ்ரீலட்சுமி. இவா்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ஆயிரம் ரூபாய், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும்.

கரூரில் 2020, ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறும் பேரவையின் 34-ஆம் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com