சேலம்-கரூர் பயணிகள் ரயில் நாளை முதல்  மீண்டும் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் வெள்ளிக்கிழமை (பிப். 15) முதல் இயக்கப்பட உள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் வெள்ளிக்கிழமை (பிப். 15) முதல் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண்: 56015, 56108 சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  வரும் பிப். 15-ஆம் தேதி முதல் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், வண்டி எண்: 56105-சேலம்-கரூர் ரயில்,  சேலம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.04 மணிக்குப் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு கரூர் சென்றடையும்.  இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து அனைத்து நாள்களிலும் இயங்கும்.
 வண்டி எண்: 56106-கரூர்-சேலம் ரயில்,  கரூரில் இருந்து காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு,  காலை 10.45 மணிக்கு சேலம் வந்தடையும்.  வண்டி எண்: 56107-சேலம்-கரூர் ரயில், சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு,  இரவு 7.30 மணிக்கு கரூர் சென்றடையும்.  வண்டி எண்: 56108-கரூர்-சேலம் ரயில், கரூரில் இருந்து இரவு 7.50 மணிக்குப் புறப்பட்டு,  இரவு 9.50 மணிக்கு சேலம் வந்தடையும்.  ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாள்களும் இந்த ரயில் இயக்கப்படும் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com