ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு

கரூரை அடுத்த அய்யர்மலை அருகே ராச்சாண்டார் திருமலைப் பகுதியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற

கரூரை அடுத்த அய்யர்மலை அருகே ராச்சாண்டார் திருமலைப் பகுதியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினரும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அலுவலருமான டாக்டர் எஸ்.கே.மித்தல், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வுசெய்தனர். 
கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலை பகுதியில் 
வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கென மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அலுவலரும், ஆய்வுக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் எஸ்கே. மித்தல், புது தில்லியில் இருந்து புதன்கிழமை கரூர் வந்து போட்டி நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
முன்னதாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் அவரை வரவேற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது காளைகள் நிறுத்தப்படும் இடம், பார்வையாளர்கள் பகுதி, வாடிவாசல், காளைகள் மற்றும் வீரர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுதல் தொடர்பாக களத்தை நேரில் ஆய்வுசெய்து ஆய்வுக் குழு உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். தி.க. ராஜசேகரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு. இளங்கோ, உதவி இயக்குநர்கள் முரளிதரன் நடராஜன் , குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com