கிருத்திகை பிரதோஷம்:  நந்திக்கு சிறப்பு வழிபாடு

கிருத்திகை பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிருத்திகை பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் கரூரில் உள்ள கல்யாணபசுபதீஸ்வரர், வஞ்சுமாலீசுவரர் மற்றும் புன்னம் சத்திரம் புன்னைவன நாதர் போன்ற சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ஆனிமாத கிருத்திகை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இதையொட்டி கோயில் முன் உள்ள நந்தியம்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோயிலை சுற்றி மூன்று முறை வாகனம் வலம் வந்தது. பக்தர்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். 
இதேபோல நத்தமேடு வேதநாயகி சமேத  ஸ்ரீபுஸ்பவனநாதர் கோயில், நன்செய்புகழூர் மேக பாலீஸ்வரர் கோயில்,  திருக்காடுதுறை மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தன.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com