ஜூலை 27-இல் அரசு பொருட்காட்சி: ஆட்சியர் ஆலோசனை

 வரும் 27-ஆம் தேதி முதல் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது என்றார் மாவட்ட


 வரும் 27-ஆம் தேதி முதல் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது என்றார் மாவட்ட  ஆட்சியர் த.அன்பழகன்.     செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசுப் பொருள்காட்சி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பேசியது:  
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு முதன்முறையாக இந்த அரசுப்பொருட்காட்சி நடத்தப்பட்டது. அதேபோல, நிகழாண்டிலும் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு அரசுப் பொருள்காட்சி நடத்தப்படவுள்ளது.
இதில், சுமார் 40 அரசுத்துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்படும். பொருள்காட்சியில் அரங்குகள் அமைக்கும் துறைகள் பயனுள்ள தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், கையேடுகள் ஆகியவற்றை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதுதவிர பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகள், தனியார் அரங்குகள் ஆகியவை அமைக்கப்படும்.  தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொருள்காட்சி திறந்திருக்கும்.
சுகாதாரத் துறை சார்பில் மருத்துவக்குழுவும், 108 அவரச ஊர்தி, தீயணைப்புத் துறையின் சார்பில் தீயணைப்பு வாகனம் மைதானத்தில் தயார்நிலையில் இருக்க வேண்டும். நகராட்சியின் சார்பில் போதிய கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
பேருந்துகள் அரசுப் பொருள்காட்சி மைதானம் வழியாக செல்வதற்கு போக்குவரத்துத் துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பேருந்துகளில் அரசுப் பொருள்காட்சி ஒட்டுவில்லைகளையும் ஒட்டியிருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், துணை ஆட்சியர் (பயிற்சி)விஷ்ணுபிரியா, கரூர் கோட்டாட்சியர் சந்தியா என அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com