"பாடத்திட்டத்தில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் தேவை'

நீதிமன்ற உத்தரவின்படி பாடத்திட்டத்தில் முழுமையாக திருக்குறளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என

நீதிமன்ற உத்தரவின்படி பாடத்திட்டத்தில் முழுமையாக திருக்குறளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கருவூர் திருக்குறள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருவூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை காலை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பேரவைச் செயலர் மேலை. பழநியப்பன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் தென்னிலை கோவிந்தன், தமிழறிஞர்கள் வையாபுரி குறளகன், ராமசாமி, திருமூர்த்தி, நீலவர்ணன்,  அருணா பொன்னுசாமி ஆகியோர் திருக்குறள் முற்றோதல் செய்தனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலை செய்த சிற்பி நல்லதம்பி சிறப்பிக்கப்பட்டார். இதையடுத்து முனைவர் கடவூர் மணிமாறன்,  தமிழன் குமாரசாமி எசுதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புரவலர் பழ. ஈசுவர மூர்த்தி பங்கேற்று திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவது,  பாடத்திட்டத்தில் நீதிமன்ற ஆணைப்படி திருக்குறளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என மாநில கல்வித் துறையை வலியுறுத்துவது, திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிப்பது,  கருவூரில் லைட் ஹவுஸ் சந்திப்பில் திருவள்ளுவர் சிலை நிறுவுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருவூர் கன்னல், குமாரசாமி, அன்பு , மல்லிகாசுப்பராயன், க. பாபாலசுப்ரமணியன், கண்ணதாசன், ப.கி. தங்கராசு, புலவர் குழந்தை, அறிவுடை நம்பி, மூங்கில் ராஜா உள்ளிட்ட  தமிழ் ஆர்வலர்கள், குறள் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com