மலர் மெட்ரிக். பள்ளியில் சர்வதேச யோகா தினம்
By DIN | Published On : 23rd June 2019 05:10 AM | Last Updated : 23rd June 2019 05:10 AM | அ+அ அ- |

தாந்தோன்றிமலை மலர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
யோகா தின விழாவில், பள்ளித்தாளாளர் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமையில் பள்ளி மாணவர்கள் யோகா என்ற வடிவில் நின்று யோகாசனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழாவில் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன், யோகா கொண்டாடப்படுவதன் நோக்கம், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினார். விழாவில் யோகா ஆசிரியை வாசுகி மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.