ரூ.10 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

கரூர் மாவட்டம், வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை

கரூர் மாவட்டம், வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கிவைத்தார். முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணி வாங்கலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்துப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தில் மொத்தம் 33 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6.86 கோடி முதல்வர் வழங்கியுள்ளார். மழைக்காலம் தொடங்கும் முன்பு வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு கடைமடை வரை செல்லும் வரை இந்த ஏற்பாடு செய்துள்ளோம். மொத்தம் 5,000 புதிய பேருந்துகளில் 4,000 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளோம். நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை உள்ளது. அந்தப் பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்டத்தின் கடைமடை  பகுதிகளில் குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, இளைஞரணி செயலாளர் விசிகே.ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com