குளித்தலை அருகே ரூ.4.21லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 03:19 AM | Last Updated : 24th March 2019 03:19 AM | அ+அ அ- |

குளித்தலை அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 4.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யர்மலை பகுதியில் சனிக்கிழமை காலை தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் மணிசேகரன் ஆகியோர் அடங்கிய பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த மினிலாரியை சோதனை செய்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த தலமலைப்பட்டியைச் சேர்ந்த குமார்(46) என்பவர் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.3,35,000 ரொக்கம் பறிமுதல் செய்தனர். மேலும் மருதூர் சோதனைச் சாவடியில் மாலை நடைபெற்ற வாகனச் சோதனையில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த ராஜா(24) வேனில் கொண்டு வந்த ரூ.86,000 பறிமுதல் செய்யப்பட்டது.