வெளிநாட்டில் வேலை என ரூ.7.5 லட்சம் மோசடி: இளைஞர் கைது
By DIN | Published On : 24th March 2019 03:18 AM | Last Updated : 24th March 2019 03:18 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 7.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த ஷாஜகான் மகன் சிராஜ் (25). இவர், தனது கல்லூரி நண்பரான கடவூர் அடுத்த கிழக்குராசப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மகன் பெரியசாமி(21) என்பவரிடம் தாய்லாந்து நாட்டில் கேட்டரிங் படித்தவர்களுக்கு வேலை உள்ளது எனக்கூறியுள்ளார். இதையடுத்து பெரியசாமி, தனது ஊரைச் சேர்ந்த முத்தன் மகன் செல்வா(22), திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஸ்டீபன்ஜெரால்டு(23) ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ.7.5 லட்சம் சிராஜிடம் கடந்த மாதம் 1 ஆம் தேதி கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விசாவில் கம்போடியா சென்றதும், விசா சுற்றுலா விசா என்பதும் பின்னர் தெரியவந்தது. மூவரும் சொந்த ஊருக்கு கடந்த 20 ஆம் தேதி திரும்பினர். மூவரும் சிராஜ் மீது பாலவிடுதி போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிந்து சிராஜைக் கைது செய்தனர்.