அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்குசேகரிப்பு

அரவக்குறிச்சி தொ குதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் புதன்கிழமை கரூர் காகிதபுரம், காமராஜ் நகர் புகழூர் கொங்கு

அரவக்குறிச்சி தொ குதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் புதன்கிழமை கரூர் காகிதபுரம், காமராஜ் நகர் புகழூர் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.  
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கரூர் காகிதபுரம், ஓனவாய்க்கால்மேடு, சொட்டையூர், மூலிமங்கலம், காமராஜ் நகர், பாண்டிபாளையம், கொங்கு நகர் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் புதன்கிழமை  பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து அவர் மேலும் பேசியது:  
கடந்த 2011-இல் ஜெயலலிதாவால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு  வந்தேன். அதே சின்னத்திற்குதான் இன்றும் ஓட்டுகேட்டு வந்துள்ளேன்.  திமுக வேட்பாளரான செந்தில்பாலாஜியை இரட்டை இலை சின்னத்தில் ஜெயிக்க வைத்தோம். அவர் எல்லா ஓட்டையும் திமுகவிடம் அடமானம் வைத்து பதவி வாங்கிவிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளர் தினமும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறார்; அவர் ஜெயித்த பின்னரும் மக்களுக்கு நன்றி கூற வரவில்லை. நான் வாக்காளர்களை நம்பி களத்தில் உள்ளேன். அவரோ பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் தருவதாக கூறுகிறார். ஆளுங்கட்சியால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்; நிலத்தை கொடுக்க முடியும்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைத்திட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.
பிரசாரத்தில், நாமக்கல் மாவட்ட எம்பி பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி, கரூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் செல்வராஜ், கரூர் நகர பேரவை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com