சிஐடியு மாநாடு வரவேற்பு குழு கூட்டம்
By DIN | Published On : 16th May 2019 08:24 AM | Last Updated : 16th May 2019 08:24 AM | அ+அ அ- |

கரூர் மாவட்ட சிஐடியு 8 ஆவது மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூர் சிஐடியூ மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வரும் ஜூன் 30 ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ள கரூர் மாவட்ட சிஐடியு 8 ஆவது மாநாடு தயாரிப்பு பணிகள் சம்பந்தமாக மாவட்ட செயலாளர் முருகேசன் விளக்கிப் பேசினார். மாநாட்டினை வழி நடத்திச் செல்வதற்கு வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு வரவேற்புக் குழு தலைவராகவும், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செயலாளராகவும், மதியழகன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் காப்பீட்டு கழக தஞ்சை கோட்ட துணைத் தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் மகா விஷ்ணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், அஞ்சல் துறை விஸ்வநாதன், வங்கி ஊழியர் சங்க வெங்கடேசன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஜான் பாட்ஷா மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிககளை உள்ளடக்கிய 13 துணைத் தலைவர்கள், 11 உதவி செயலாளர்கள் உள்ளிட்ட 71 பேர் கொண்ட வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் நகர குழு சார்பில் ரூ. 25,000, கட்டுமான சங்கத்தின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் முதல் தவணையாக ரூ.5,000 குழுவிடம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் குப்பம் கந்தசாமி, ராஜாமுகமது, காதர் பாட்சா, சாந்தி, மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, ஹோசிமின் மற்றும் அனைத்து இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய தர தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.