பேருந்து மோதியதில் விவசாயி பலி
By DIN | Published On : 18th May 2019 08:58 AM | Last Updated : 18th May 2019 08:58 AM | அ+அ அ- |

இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளையைச் சேர்ந்தவர் மாயவன்(39); விவசாயி. இவர் வியாழக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து அவரது வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாயவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநரான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாதனூரைச் சேர்ந்த தமிழ்செல்வன்(31) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.