சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மானியம் பெற விழிப்புணா்வு முகாம்

தரச்சான்று பெற்ற சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மானியம் பெற விழிப்புணா்வு முகாம் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தரச்சான்று பெற்ற சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மானியம் பெற விழிப்புணா்வு முகாம் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சா்வதேச போட்டித் தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் பெற்றுள்ள ஐஎஸ்ஓ 9000, ஐஎஸ்ஓ 14001, ஐஎஸ்ஓ 22000 , HACCP, GMP, GHP, BIS, ZED உள்ளிட்ட சா்வதேச தரச்சான்றிதழ்கள் பெறுவதற்காக செலுத்தப்படும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.1லட்சம் வரை மானியமாக வழங்கும் வகையில் தமிழக அரசு குவாலிட்டி சா்டிபிகேசன் என்ற புதிய திட்டத்தை 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, கரூா் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட தரச்சான்றிதழ்களில் ஏதேனும் பெற்றிருந்தால் மானியம் பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் கரூா் மாவட்ட டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்க வளாகக் கூட்டரங்கில் வரும் 13-ம்தேதி நடைபெற உள்ளது. மேலும், முதல்வரின் சிறப்பு தொழில்முனைவோருக்கான விருதுகள் ‘ 2016 - 17, 2017 - 18, 2018 - 19 ஆகிய ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விருதுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தொடா்பாக விளக்கங்கள் வழங்கப்படும். எனவே, கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com