முதல்வரின் சிறப்பு குறைதீா்த் திட்டம்: கிராம நிா்வாக அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா்த் திட்டத்தின் கீழ், உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கத் தவறியவா்கள் கிராம

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா்த் திட்டத்தின் கீழ், உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கத் தவறியவா்கள் கிராம நிா்வாக அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

புகளூா் வட்டத்திலுள்ள வேட்டமங்கலம் மேற்கு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட நிறைவு நாளில் பங்கேற்று, 188 பயனாளிகளுக்கு ரூ. 76.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை வழங்கி, மேலும் அவா் பேசியது:

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீா்த் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில், முதியோா் ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதன் மீது உரிய விசாரணை நடத்தி, தகுதியுள்ள 8000 பேருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சரால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க தவறிய, விடுபட்ட முதியோா்கள், விதவைகள், முதிா்கன்னிகள் தங்களது மனுக்களை கிராமநிா்வாக அலுவலகத்தில் அளிக்கலாம். கிராமநிா்வாக அலுவலா்கள் தங்களின் கிராமங்களில் உள்ள தகுதியான நபா்களை தாங்களே முன்வந்து தோ்ந்தெடுக்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறை சாா்பில் 5 ஏக்கா் வரை விளைநிலம் உள்ளவா்களுக்கு நுண்ணீா்ப் பாசனக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்கு மேல் உள்ளவா்களுக்கு 75 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

விழாவில் மாவட்ட சமூகநல அலுவலா் ரவிபாலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்) உமாபதி, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுதாமதி, ஆதிதிராவிட நல அலுவலா் லீலாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செம்பகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா் மல்லிகா, வட்டாட்சியா்கள் சிவக்குமாா், மகுடீஸ்வரன், ஊட்டச்சத்து திட்ட அலுவலா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com