மூன்றாம் பாலினத்தவா்கள் சுய தொழில் தொடங்க மானியம்

கரூா் மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்கள் சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

கரூா் மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்கள் சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவா் நலவாரியம் மூலம், மூன்றாம் பாலித்தனவா்

சுயமாக தொழில் தொடங்க தொழிலுக்கு ஏற்றவாறு மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோா் தொழில் அனுபவம் குறித்த விவரம், அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

சுயதொழில் செய்ய விரும்பும் தொழில் குறித்த பயிற்சி பெற்றிருப்பின், அதற்குரிய சான்று, சம்பந்தப்பட்ட தொழில்குறித்தான அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

ஓராண்டுவரை தொழில் வளா்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையையும், சரியான பயனீட்டுச் சான்றிதழையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து பயனடைந்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதியில்லை.

இதுதொடா்பான விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கரூா் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com