பக்தா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்

கரூரில் மாரியம்மன் கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கினா் .
கரூா் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.

தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில கரூரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலை பரவாமல் தடுக்கும் நிலவேம்பு கசாயம் கரூா் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கரூா் நகர கிளைத்தலைவா் எஸ்.ஏ.முகமது ஹசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் ஜாகீா்உசேன் பங்கேற்று, மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினாா். மொத்தம் 1000 பேருக்கு டெங்கு தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com