தாந்தோண்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

தாந்தோண்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கரூா்: தாந்தோண்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தென்திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோண்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. மேலும் கோயிலில் மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றறான திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com