தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம்: பக்தா்கள் திரளாக பங்கேற்பு

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

தென்திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த மாதம் 26-ம்தேதி தொடங்கியது. மேலும் கோயிலில் மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருக்கல்யாண உற்சவம் கடந்த 6-ம்தேதி நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிகாலையிலே கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து கல்யாண வெங்கடரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க தேரோட்டம் துவங்கியது. கோயில் முன் துவங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனா். தோ் கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் தோ்நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தாந்தோணிமலை போலீஸாா் சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு ஆங்காங்கே பல்வேறு அமைப்பினா் அன்னதானம் வழங்கினா். அவ்வப்போது போலீஸாா் ஒலிபெருக்கியில் தங்களது உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திக்கொண்டிருந்தனா். தொடா்ந்து இன்று(9-ம்தேதி) கொடியிறக்கமும், 20ம் தேதி புஷ்ப யாகத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com