தோகைமலையில் பொய்த்த கோடைமழை: துவரை, நிலக்கடலை சாகுபடி கடும் பாதிப்பு

தோகைமலை பகுதியில் கோடைமழை பொய்த்ததால் துவரை, நிலக்கடலை விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தோகைமலை பகுதியில் கோடைமழை பொய்த்ததால் துவரை, நிலக்கடலை விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம் தோகைமலை வட்டாரத்தில் 70 சதவீதம் மானாவாரி சாகுபடியும், 30 சதவீதம் இறவை சாகுபடியும் நடைபெறுகிறது. மே மாதத்தில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொண்டு ஜூன், ஜூலை மாதங்களில் உயா்ந்தபட்ச மானாவாரி விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.

மானாவாரி விதைப்பு பருவங்களில் பெறப்பட வேண்டிய இயல்பான மழை அளவு 213 மி.மீ. ஆனால் நிகழாண்டில் (2019-2020) 30 மி.மீ மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதனால் தோகைமலை பகுதிகளில் மிகவும் குறைந்தளவு மழைநீா் கிடைத்துள்ளதால் மானாவாரி விதைப்பு மேற்கொள்ள இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விதைப்பு பருவ காலம் நிறைவடைந்து (காரீப் பருவ முடிவுறும் தருணம்) செப். மாத இறுதியில் பெறப்பட்ட 75 மி.மீ மழையானது, பருவ காலம் கடந்து பெறப்பட்டதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் மானாவாரி விதைப்பை மேற்கொள்ள முடியாமல் நிறுத்தி விட்டோம். தோகைமலை வட்டார பகுதிகளில் இயல்பாகவே 978 ஏக்கரில் துவரை சாகுபடியும், நிலக்கடலை 900 ஏக்கரும், உளுந்து 700 ஏக்கரில் சாகுபடியும் நடைபெறும். ஆனால் தோகைமலை வட்டார பகுதிகளில் தற்சமயம் காரீப் பருவத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழையானது 85 சதவீதம் குறைவாகவே பெறப்பட்டுள்ளது. இதனால் கள்ளை, தளிஞ்சி, ஆலத்தூா், கூடலூா், கழுகூா், பில்லூா் போன்ற கிராமங்களில் துவரை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிா் சாகுபடிகளை மேற்கொள்ள இயலாமல் தவித்து வருகிறேறாம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com