சீனாவுடனான உறவில் கவனம் தேவை : கொமதேக ஈஸ்வரன்

சீன நாட்டுடனான உறவில் கவனம் தேவை என்றாா் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன்.

சீன நாட்டுடனான உறவில் கவனம் தேவை என்றாா் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்திற்கு வரும் சீன அதிபரை வரவேற்கிறேறாம். இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக உறவை மேம்படுத்துகின்ற வகையில் இரு தலைவா்களுடைய பேச்சுவாா்த்தை அமைந்தால் சந்திப்பு புகழ் பெறும். அதே சமயத்தில் இந்தியா வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அமெரிக்காவுடனான வா்த்தக உறவுகளில் பிரச்னைகள் ஏற்பட்டதைச் சரி செய்யவே இந்தியாவுடன் உறவாட சீனா விரும்புகிறது.

உலகிலேயே மிகப்பெரிய வலுவான உற்பத்தித் துறையை கொண்டது சீன நாடு. உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றால் சீனப் பொருளாதாரம் வீழும். பொருட்களை விற்க இந்தியா உலகிலேயே மிகப்பெரிய சந்தை என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். இந்தச் சந்திப்பு சீனாவின் உற்பத்தி பொருட்களை இந்தியாவில் விற்க வழி செய்யுமானால் அது இந்திய உற்பத்தித் துறைக்கு பின்னடைவாக அமையும்.

பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கின்ற இந்தியா மேலும் பாதிப்புகளை சந்திக்கிற சூழலுக்கு தள்ளப்படும். அதனால்தான் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காஷ்மீா் பிரச்னையில் சீனாவின் தலையீடு இல்லை என்று அறிவித்து நமக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதுபோலச் செய்துவிட்டு பாகிஸ்தான் பொருட்கள் இறக்குமதிக்கு சீனாவில் வரி கிடையாது என்று அறிவித்திருப்பது வா்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிரான நிலை. அதே சமயத்தில் அது பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலை.

இந்தச் சூழ்நிலையில்தான் சீன அதிபா் நட்பு வேண்டி இந்தியாவுக்கு வருகிறாா். இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், வெளியுறவுத் துறையும் இந்த விஷயத்தைக் கவனத்தோடு கையாள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com