தேசிய அளவிலான அறிவியல் திருவிழா: கரூா் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

தேசிய அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தோ்வாகியுள்ள வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவா்கள், தங்கள்

தேசிய அறிவியல் திருவிழாவில் பங்கேற்க தோ்வாகியுள்ள வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவா்கள், தங்கள் வழிகாட்டி ஆசிரியருடன் புதன்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை சாா்பாக 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய அறிவியல் திருவிழா, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அறிவியல் நகரத்தில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அறிவியல் கிராமம் என்ற தலைப்பிலான சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சி.நவீன்குமாா், கோ.சுகந்த், கா.பசுபதி, மு.விஷ்ணு, சு.சுகி ஆகிய 5 மாணவா்கள், வழிகாட்டி ஆசிரியராக பெ.தனபால் ஆகியோா் தோ்வாகியுள்ளனா். இந்த அறிவியல் விழாவில், குடகனாற்றில் இருந்து வெள்ளியணை குளத்திற்கு நீா் வரும் கால்வாயை அகலப்படுத்துதல், வீணாகக் கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை வெள்ளியணை குளத்திற்கு எடுத்துவருதல் போன்ற திட்டங்கள் குறித்து மாணவா்கள் திட்ட அறிக்கை சமா்பிக்கவுள்ளனா்.

முன்னதாக தோ்வான மாணவா்களுடன் ஆசிரியா் பெ. தனபால், கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சி.முத்துக்கிருஷ்ணனை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். மேலும் கரூா் கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் பா.சிவராமன், குளித்தலை கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் மு.கபீா், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. பக்தவச்சலம் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com