புலியூா் பகுதியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு மூடல்

கரூா் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் வருவாய்த் துறையினா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினா் தீவிரம் காட்டிவருகின்றனா்.
புலியூா் பேரூராட்சியில் வெங்கடாபுரத்தில் திறந்துகிடந்த ஆழ்துளை கிணறுகளை மூடும் நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சோ்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மகன் சுஜித் வில்சன் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தது தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளைக் கண்டறிந்து அவற்றை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் இதுதொடா்பாக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வுப் பணிகளில் மேற்கொண்டுள்ளனா். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கட்பட்ட பகுதிகளில்

புதன்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, புலியூா் பேரூராட்சி பகுதிகளிலும் பேரூராட்சி அலுவலா்கள் அப்பகுதியில் திறந்து கிடந்த ஆள்துளைக்கிணறுகளை மூடும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com