கரூர் நகராட்சிப் பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும்

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மக்களைத்தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் முதல்வரின் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகிறது. கரூரில் கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ரத்தினம்சாலை,  ஈஸ்வரன் கோவில் பகுதியில்  உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன்,  நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பணை பன்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை.சிவசாமி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு செல்வராஜ், வி.சி.கே.ஜெயராஜ்,  தானேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com