முருகன், மகாமாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு

கரூர் தொழிற்பேட் டை கல்யாணசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் தொழிற்பேட் டை கல்யாணசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் தொழிற்பேட்டை அரசுக் காலனியில் கரூர் சஷ்டிக் குழுவினரால் இக் கோயில் கட்டப்பட்டது.  கும்பாபிஷேகம் விழாவையொட்டி முன்னதாக புதன்கிழமை காலை கணபதி ஹோமம்,  மாலையில் முதற்கால யாக பூஜை,  மருந்துசாத்துதல், கலச ஸ்தாபனம் நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை,  நாடிசந்தானம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து கலச வேள்வி, கடம் புறப்பாடு நடைபெற்றது. 
தொடர்ந்து சிவாச்சாரியார் கணேசசர்மா தலைமையில் செகந்நாத ஓதுவார் திருமுறை இசையுடன் கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு காலை 10 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.  ஆவண கார்த்திகேயன் தொடக்கி வைத்தார். திருப்பணிக் கமிட்டித் தலைவர் மேலை பழநியப்பன்,  சஷ்டிக்குழு நிறுவனர் காளிமுத்து மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தோகைமலை அருகே கழுகூர் முனையம்பட்டியில் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
இங்குள்ள மகாமாரியம்மன் கோயிலில் விநாயகர், பகவதியம்மன், மகாமாரியம்மன், சப்தகன்னிமார்அம்மன், கருப்பண்ண சுவாமிகள் தனித்தனி சன்னதியாக அமைந்துள்ளன. இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, யாத்ராதானம், கடம்புறப்பாடுகள் நடைபெற்றது. 
தொடர்ந்து  கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் விழா கமிட்டியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com