செப். 30-ல் தாந்தோணிமலை கோயில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.


தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. வரும் அக். 20 வரை 25 நாட்கள் நடைபெறுகிறது. வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம், வரும் அக். 6 மாலை 3.30 - 4.30 மணிக்குள் திருக்கல்யாணம், அக். 8 காலை 8.15 - 8.45 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. அக். 9 இல் கொடியிறக்கம். 20 ஆம் தேதி புஷ்ப யாகத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
அக். 3, 11, 14, 17-களில் வெள்ளிக் கருட சேவை, அக் 7ஆம் தேதி குதிரை வாகனம், அக். 16ம் தேதி வெள்ளி ஹனுமந்த வாகனம், அக்.18 ஆம் தேதி முத்துப்பல்லக்கு, அக். 19 ஆம் தேதி ஆளும் பல்லக்கு, அக். 20 ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெறுகிறது. உற்சவ காலங்களில் காலை 9 மணிக்கு பல்லாக்கும், இரவு 8.30 வாகன வீதி உலாவும் நடைபெறும்.
2 ஆவது சனிக்கிழமையான செப். 28 ஆம் தேதி  கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படும். உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
வரும் 30 ஆம் தேதி ஹம்ச, அக்.1ல் சிம்ம, 4ல் சேஷ, 5ல் யானை, 9ல் கெஜலட்சுமி, 10ல் பின்னக்கிளை, 13ல் துளசிபிருந்தா வாகனங்களில் இரவு புறப்பாடு, அக். 6ல் புஷ்பக விமானம், 12ல் ஏகாந்தசேவை, 15ல் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ம. சூரியநாராயணன், செயல் அலுவலர் நா. சுரேஷ் உள்ளிட்டோர் செய்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com