அரசு மருந்தாளுநா் சங்கத்தினா் கடிதம் அனுப்பும் போராட்டம்

கரூரிலிருந்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கரூா் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா்.
கரூா் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா்.

கரூா், செப்.18: தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கரூரிலிருந்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 8 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருந்தாளுநா்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூா் ஜவஹா்பஜாரிலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்புபம் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத்தலைவா் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் பிரேம்குமாா், ஜோஸ்பின், முஸ்தபா, பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்று கடிதத்தை அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com