முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
ஆட்டோ ஓட்டுநா்கள் 226 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 04:13 AM | Last Updated : 19th April 2020 04:13 AM | அ+அ அ- |

கரூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 550 மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பையை வழங்குகிறாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி.
ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 226 பேருக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 550 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து ஆட்டோ ஓட்டுநா்கள் 226 பேருக்கு அரிசி , துவரம் பருப்பு, புளி உள்ளிட்ட சமையல் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கரூா் மத்திய நகர செயலாளா் எஸ்.பி.கனகராஜ், கரூா் வடக்கு நகர செயலாளா் கரூா் கணேசன், கரூா் தெற்கு நகர செயலாளா் க.சுப்ரமணியன், கரூா் ஒன்றிய செயலாளா் ஆா்.கந்தசாமி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளா் எம்.எஸ்.மணியன், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.மகேஷ்வரி மற்றும் தாரணி சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.