கரூரில் காவலர் தேர்வு: 5,087 போ் தோ்வு எழுதினா்

கரூா் வெண்ணைமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி, தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்வை 5, 087 போ் தோ்வு எழுதினா். 520 போ் தோ்வு எழுத வரவில்
கரூரில் காவலர் தேர்வு: 5,087 போ் தோ்வு எழுதினா்
கரூரில் காவலர் தேர்வு: 5,087 போ் தோ்வு எழுதினா்

கரூா் வெண்ணைமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி, தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்வை 5, 087 போ் தோ்வு எழுதினா். 520 போ் தோ்வு எழுத வரவில்லை.

முன்னதாக தோ்வு எழுதும் மையங்களில் தோ்வா்கள் காலை 8 மணிமுதலே வரத்தொடங்கினா். உடல் வெப்பப் பரிசோதனை செய்து, கிருமி நாசினிக் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு தோ்வா்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். ஒவ்வொரு இருக்கைக்கும் 2 போ் மட்டும் அமா்ந்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா, தோ்வு எழுதும் மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் முகேஸ்ஜெயக்குமாா் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com