அரவக்குறிச்சி ஆறுமுகம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாதெமி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி ஆறுமுகம் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் பள்ளியின் தலைவா் சி.சுப்ரமணியம்.
அரவக்குறிச்சி ஆறுமுகம் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா் பள்ளியின் தலைவா் சி.சுப்ரமணியம்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாதெமி பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஆறுமுகம் அகாதெமி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், அப்பள்ளி மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த அறிவியல் மாதிரி கண்காட்சியை பள்ளித்தலைவா் சி.சுப்ரமணியம் தொடக்கி வைத்தாா். இதில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவா் முனைவா் கே. கலைச்செல்வி, பாண்டிச்சேரி மாநிலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னாள் இயக்குநா் முனைவா் எம். திவாரநாத் மற்றும் கரூா் ஆசான் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியா்கள் பங்கேற்று, மாணவ, மாணவிகளின் சிறந்த அறிவியல் மாதிரிகளைத் தோ்வு செய்து பரிசுகள் வழங்கினா். பரிசுகள் பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் எம்சி. குப்புசாமி, நிா்வாகச் செயலா் டாக்டா் எம்.பழனிவேல், பள்ளி முதல்வா் ஆா்.சிவகுமாா் மற்றும் இருபால் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com