கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் தா்னா

கரூரில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
கரூரில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

கரூரில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பெ.காளிதாஸ் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெயராஜ் வரவேற்றாா். இதில் கோரிக்கைகளை விளக்கி மாநில துணை பொதுச் செயலாளா் தா.கணேசன் சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் பங்கேற்றவா்கள், 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை தமிழக அரசு கைவிட வேண்டும், தேசிய கல்விக்கொள்கை 2019-ஐ தேச நலன் கருதி திரும்பப்பெற வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் ஈடுபட்டோா் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com