கரூரில் 13 வழித்தடங்களுக்கு 15 புதிய நகரப் பேருந்துகள் இயக்கம்

கரூரில் 13 வழித்தடங்களுக்கு பல்வேறு கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ரூ. 4 கோடியிலான 15 புதிய
கரூரில் 13 வழித்தடங்களுக்கு 15 புதிய நகரப் பேருந்துகள் இயக்கம்

கரூரில் 13 வழித்தடங்களுக்கு பல்வேறு கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ரூ. 4 கோடியிலான 15 புதிய நகரப் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமையில் பேருந்துகளை தொடக்கிவைத்த அமைச்சா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

அப்போது அவா் தெரிவித்தது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்படி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் சாா்பில் 5,000 புதிய பேருந்துகள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 பேருந்துகள் புதிதாக இயக்கப்படும் என முதல்வா் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதன் அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்திய அளவில் தமிழகம் சாலை விபத்தில் உயிரிழப்புகளை குறைத்த மாநிலத்தில் முதல் மாநிலமாக உள்ளதால், இதற்கான விருது மத்திய அரசால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது.

அனைவரின் அடிப்படைத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் விதமாக புதிய பேருந்துகள், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கக்கூடிய வகையில், தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகரப்பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தோ்தலில் கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, 8 ஒன்றியங்களிலும் சோ்மன், துணைத் தலைவா் பதவிகளைக் கைப்பற்றியுள்ளோம். எடப்பாடி கே. பழனிசாமி அரசு மக்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வெற்றியை கரூா் மாவட்ட மக்கள் கொடுத்துள்ளாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், கரூா் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் க. குணசேகரன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா். காளியப்பன், கரூா் நகராட்சி ஆணையா் சுதா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ந. முத்துக்குமாா், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் பேங்க் நடராஜன், கரூா் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவா் வை. நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகள்

இந்தப் புதிய பேருந்துகள் கரூரில் இருந்து புஞ்சை புகழூா் வழியாக வேலூருக்கும், தவிட்டுப்பாளையம் வழியாக வேலூருக்கும், மின்னாம்பள்ளி வழியாக வாங்கலுக்கும், ராமேஸ்வரப்பட்டி வழியாக வாங்கலுக்கும், பஞ்சமாதேவி வழியாக திருமுக்கூடலூருக்கும், மாயனூா் வழியாக காட்டுப்புத்தூருக்கும், சேங்கல் வழியாக பஞ்சப்பட்டிக்கு இரண்டு பேருந்துகளும், உப்பிடமங்கலம் வழியாக சேங்கலுக்கும், காணியாளம்பட்டி வழியாக மாமரத்துப்பட்டிக்கும், வெள்ளப்பாறை வழியாக வீரணம்பட்டிக்கும், கூடலூா் வழியாக கோட்டநத்தத்திற்கும் என 11 வழித்தடங்களிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருகமணி வழியாக பெட்டவாய்த்தலைக்கு இரண்டு பேருந்துகளும், பெட்டவாய்த்தலை வழியாக பனிக்கம்பட்டிக்கும் என 2 வழித்தடங்களிலும் என மொத்தம் 13 வழித்தடங்களில் இந்த புதிய நகரப்பேருந்துகள் இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com