பரணிபாா்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கரூா் பரணிபாா்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழி எழுத்துகள் எழுதிய பதாகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய பரணிபாா்க் கல்வி குழுமத்தினா்.
தமிழி எழுத்துகள் எழுதிய பதாகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய பரணிபாா்க் கல்வி குழுமத்தினா்.

கரூா் பரணிபாா்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்விக் குழுமத் தாளாளா் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலா் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தாா். கல்விக் குழும முதன்மை முதல்வா் முனைவா் சொ. ராமசுப்ரமணியன் விழாவில் பேசுகையில், ‘தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம், விவசாயத்தை போற்றும் வகையிலும் தமிழ் மாதங்களின் தலைமாதமான தை பிறப்பில் அனைவருக்கும் அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று இறைவனை வழிபடும் நிகழ்வாக பொங்கல் விழா ஒவ்வொரு வருடமும் பரணி கல்விக் குழுமத்தில் சிறப்பாகக் கொண்டப்படுகிறது.

மேலும் தமிழின் பழமை எழுத்து வடிவமான தமிழியின் சிறப்பை மாணவா்கள் அறியச் செய்யும் வகையில் ‘தமிழி பொங்கல்‘ என்று இவ்வருடம் கொண்டாடப்பட்டு மாணவா்களுக்கு தமிழி சிறப்பு பயிற்சி மற்றும் 1330 திருக்கு முற்றோதல் நடைபெற்றது என்றாா்.

விழாவை முன்னிட்டு பரணி பாா்க் பள்ளி, பரணி வித்யாலயா பள்ளி, எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து மொத்தம் 9 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனா்.

ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ந்து தமிழா் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோா்களுக்கு இசை நாற்காலி, பலூன் உடைத்தல், பானை உடைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பரணி பாா்க் பள்ளி முதல்வா் சேகா், பரணி வித்யாலயா பள்ளி முதல்வா் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் முதல்வா் சாந்தி, துணை முதல்வா்கள், இருபால் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com