மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு புதிய தமிழகம் கட்சியினா் அஞ்சலி
By DIN | Published On : 23rd July 2020 08:44 PM | Last Updated : 23rd July 2020 08:44 PM | அ+அ அ- |

கரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டத்தில் இறந்த மாஞ்சோலை தோட்டத்தொழிலாளா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் அசோகன் தலைமை வகித்து, இறந்துபோன தேயிலை தோட்டத்தொழிலாளா்களின் படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி செயலாளா் நந்தகுமாா், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் விஜயமன்னன், வேலாயுதம்பாளையம் நகரச் செயலாளா் சிவஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மணல் கடத்தல் : 2 போ் கைது
கரூா் மாவட்டம், தென்னிலை அருகே தொப்பம்பட்டி 4 ரோடு பகுதியில் டாரஸ் லாரியில் சிலா் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திச் செல்வதாக தென்னிலை போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, கரூா் நெரூா் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திச் சென்ற கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த காக்கயம்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி(32), கடவூா் அடுத்த கீரனூரைச் சோ்ந்த ராமா் 21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனா்.